Blog

தாயின் கருவறையுள் !

15 Feb, 2017 By Uyirkkural

  1-2 வாரம்

ஆணின் (தந்தையின்) விந்து (sperm) பெண்னின் (தாயின்) முட்டையோடு சேரும் தருணத்தில் ஒரு உயிர் கருத்தரிக்கிறது. கருத்தரித்த இந்த உயிர் தாயினின்றும் தந்தையினின்றும் முழுவதுமாக வேறுபட்ட தனித்தன்மை வாய்ந்த DNA கொண்ட தனி உயிர்.

3-4 வாரம்

கருத்தரித்து வெறும் மூன்று வாரம் 18 – வது நாளில் குழந்தையின் இதயம் தோன்றுகிறது. 3 வாரம் 1 நாள் கழிந்து இதயம் துடிக்கத் துவங்குகிறது. இச்சமயத்தில் கருத்தரித்த குழந்தையின் இதயம் நிமிடத்திற்க்கு 105 – 120 முறை துடிப்பதாக ஆய்வாளர்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

 4-5 வாரம்

இந்தக் கால கட்டத்தில் குழந்தையின் மூளை நம்பமுடியாத வேகத்திலும் விகிதத்திலும் வளர்கிறது. 4 முதல் 41/2 வாரங்களில் சிறு மூளை தோன்றுகிறது. நிரந்தர சிறுநீரகங்கள் 5 வாரங்களில் தோன்றும்.

 5-6 வாரம்

51/2 வாரத்தில் குழ்ந்தையின் கை, கால்கள் உருவாகிறது, மூளை மற்றும் முதுகுத்தண்டும் தெளிவாக காணப்படுகின்றது. 6 ஆம் வாரத்தில் பெருமூளை எனப்படும் (cerebral cortex) தோன்றுகிறது. ஒரு கர்ப்பிணி பெண்னுக்கு குறைந்த பட்சம் 8-10 வாரத்திற்க்கு மேல் தான் குழந்தையின் அசைவை உணரமுடிகிரது ஆனால்  5-6 வாரத்திலேயே கருவின் அசைவுகள் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். 6 வது வாரத்தில், வெளிப்புற காது, வடிவம் எடுக்கத் தொடங்குகிறது.

6-7 வாரம்

6 வாரத்தில் மூளை அலைகள் (brain waves) காணப்படும் மேலும் EEG மூலம் இதனை பதிவு செய்யலாம். 7 ஆம் வாரத்தில், சுவை மொட்டுகள் ஒத்திருக்கும் செல் குழுக்களாகும், நாக்கு தோன்றும்  மற்றும் விக்கல்கள் தொடங்கும். இதயத்தின் 4 அறைகள் (chambers) காணப்படும். குழந்தையின் இதயம் நிமிடத்திற்க்கு 160-175 முறை துடிக்கிறது. 61/2 வாரத்தில் கருவில் உள்ள குழந்தை தன் இரு கைகளையும் அசைக்கும் அளவு வளர்ந்துள்ளது என்பது பெருமளவிலான தாய்மார்க்குத் தெரிவிக்கப்படாத உண்மை. இதே சமையத்தில் கழுத்துப் பட்டை எலும்பு, மேல் தாடை, கீழ் தாடை போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட வளர்ச்சி ஆரம்பமாகிறது. 

7-8 வாரம்

7 ஆம் வாரத்தில் பெண் குழந்தையில் கருப்பைகள் தோன்றும், ஆண் கருவில் testes உற்பத்தியாகி பாலின வேறுபாடு ஏற்படுகிறது. 71/2 வாரத்தில் கருவில் உள்ள குழந்தை கை கால்களை மடக்குவது, திடுக்கிட்டால் குதிப்பது போன்ற அசைவுகளை வெளிப்படுத்தும்.

8-9 வாரம்

8 வாரங்களில் மூளை மிகவும் வளர்ச்சியடைந்து அசாதாரண வேகத்தில் வளர்ச்சியை தொடர்கிறது. கருவின் ஒட்டுமொத்த எடையில் 43% மூளையின் எடை. கண்களின் இமை மற்றும் புருவம் உருவாகியிள்ளது, தற்போதைய கட்டத்தில் வயது முதிர்ந்தவரிடம் காணப்படும் உடல் கட்டமைப்பில் 90% வளர்ச்சி கருவில் உள்ள குழந்தையிடம் காணப்படுகிறது.

9-10 வாரம்

9 வாரத்தில் கட்டைவிரலை உரிஞ்சுவதும், வாயை திறந்து மூடுவதும், தலையை முன்னும் பின்னும் அசைப்பதும், மிகவும் இலகுவான தொடுதலைக் கூட உணர்ந்து கால்களை பின்னிழுத்துக்கொள்ளும் அசைவுகளை வெளிப்படுத்துவது, பெருமூச்சு விடுவது போன்ற அசைவுகளை வெளிப்படுத்துகிறது. பெண் சிசுக்களில் கற்பப்பை தோன்றும் மேலும் குழந்தை, ஆணா பெண்னா என்பதை வெளிப்படுத்தும் பிறப்புறுப்புக்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

10-11 வாரம்

கொட்டாவி விடுவது, தாடையை அசைப்பது, கண்களை உருட்டுவது, கை விரல் உறிஞ்சுவது போன்ற முதிற்சியான அசைவுகள் தென்படும் சமையம் இது. இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், 10 வார சிசுவில் கைரேகை வெளிப்படத்தொடங்கி அக்குழந்தையின் தனித்தன்மையை நிரூபிக்குமளவிற்க்கு வளர்ச்சியடைந்துள்ளது. இதயத் துடிப்பு எண்ணிக்கை இப்போது 10 மில்லியன் தாண்டியுள்ளது.

11-12 வாரம்

11 வாரத்தில் குழந்தையின் மூக்கு, உதடுபோன்ற உறுப்புக்கள் முழுவதுமாக உருவாகி வளர்ந்துள்ளதால்  சிரிப்பு, முகச்சுளிப்பு போன்ற முகபாவனைகளை வெளிப்படுத்தத் தொடங்கும். பிறக்கப்போவது ஆனா, பெண்னா என்பது கருத்தரிக்கும் நொடியில் நியமிக்கப்பட்டாலும் அதனை வேறுபடுத்தும் பிறப்புறுப்புக்கள் இச்சமயத்தில் தோன்றும். கை கால்களில் நகங்கள் வளரத்துவங்குகிறது.

12-13 வாரம்

12 ஆம் வார இறுதியில் 3 மாதம் முடிவடைகிறது. இச்சமயத்தில் குழந்தையின் தோல் தடிமனாகிறது, கை கால்களின் அசைவு அதிக அளவில் காணப்படுகின்றது, 1 மணி நேரத்தில் சுமார் 50 தடவை சிசு வாயைத் தொடுகிறது.

3-4 மாதம்

பெரியவர்கள் போலவே கருவில் உள்ள சிசுக்களுக்கும் 3-4 மாதங்களில் வலி மற்றும் மன அழுத்தத்தின்போது உடலில் சுரக்கும் cortisol என்ற சுரப்பி சுரப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  இதனால் இப்பருவத்தில் உள்ள சிசுக்கள் வலியை உணரவும் கூடும் என்ற ஆய்வறிக்கைகளும் மேலை நாடுகளில் வெளியாகியுள்ளன.

4- 5 மாதம்

16 வாரத்தில் மூளையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி பெரிதும் நிறைவடைந்துள்ளது. நம் உடலின் இதயத்துடிப்பு, தூக்கம், விழிப்பு, ஜீரணம் இவற்றை இயக்கும்  circadian rhythm என்ற இயற்க்கைச் சுழற்ச்சி சிசுக்களிலும் காணப்படுகின்றது. உள் காது முழுவதுமாக வளர்ச்சியடைந்து 20 வாரத்திலேயே கேட்கும் திறனையும்  குழ்ந்தைகள் அடைகின்றனர்.

  5-6 மாதம்

தூக்கதில் கனவு காண்பவர்களிடம் காணப்படும் தனித்தன்மையான REM என்ற கண் அசைவு 18-21 வாரங்களில் உள்ள சிசுக்களிடையே காணப்படுகின்றது. அசைவு, வலி, சூடு, குளிர்ச்சி, அழுத்தம், ஒளி போன்றவை குழ்ந்தையை பெரிதாக பாதிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 6-7 மாதம்

24 வாரத்திற்க்குப் பின் நுரையீரலில் மூச்சுச்சிற்றறைகள் முழு வளர்ச்சியடைவதால் கருவிற்க்கு வெளியே குழந்தைகள் வாழ்வது சாத்தியமாகிறது. ultrasound மூலம் கருவில் உள்ள குழந்தை குட்டிகர்ணம் அடிப்பதையும் கண்டு வியக்கலாம்.   உலகில் பிறந்த குறைமாத குழந்தைகளில்  அமீலியா என்ற குழந்தை 22 வாரத்தில் பிறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

7-8 மாதம்

சுவையுணர்வது – கசப்பானவற்றை தாய் உண்டால் முகம் சுளிப்பது போன்ற முகபாவங்களை சிசுக்கள் வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கற்பப்பையில் பல இரைச்சல்களுக்கிடையே தாயின் குரலை சிசுக்கள் தெளிவாக கண்டறியும். பெரிதும் தாயின் குரலைக் கருவினுள் கேட்பதால் பிறந்தபின்னும் தாயின் குரலையே குழந்தைகள் விரும்பும். 36 வாரத்தில் இதயம் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை அடித்து கொண்டிருக்கிறது.

8-9 மாதம்

மூளையின் இலட்சக்கணக்கான நரம்பு மண்டலம் முதல் அனைத்து உள்ளுறுப்புக்களும் வெளியுறுப்புக்களும் முழு வளர்ச்சியடைந்துள்ளது. தான் எப்பொழுது வெளியுலகிற்க்கு வருவது, அதாவது பிறக்கப்போகும் காலத்தை குழந்தை முடிவு செய்கிறது. கருத்தரிப்பு முதல் பிறப்பு வரை மனித உயிரின் படிப்படியான வளர்ச்சியையும் அதன் நுணுக்கங்களையும்  முழுமையாக தெரிந்துகொள்ளும் அளவிற்க்கு மருத்துவ தொழில்நுட்பம் முன்னேறவில்லை என்பதுதான் உண்மை.

மேலும் விவரங்களுக்கு :

http://www.ehd.or

 

 

Share this with

Add your comment

Name
Email
Message*

Latest Videos

View more videos